Wednesday 14 December 2011

"பாரத ரத்னா"...:- மூதறிஞர் ராஜாஜி...:- சில குறிப்புக


பன்முகத் திறமைகள் படத்த...புகழ் பெற்ற  வழக்கறிஞர், மாபெரும் இலக்கியங்களை படைத்த‌ எழுத்தாளர் மற்றும் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பெரும் பங்கு பெற்றவரும்...இந்திய அரசியலில் மிகப் பெரிய பதவிகளை வகித்த ராஜதந்திரியானவரும்.."இந்தியாவின் ஒரே இந்திய கவர்னர் ஜெனரல்" என்ற பெருமைக்கு உரியவரானவரும்... "என் மனச்சாட்சியின் காவலர்" என்று மகாத்மா காந்தியால் புகழப்பட்ட...உலகின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான மூதறிஞர் திரு ராஜாஜியை பற்றி ஒரு நோட்டில் சொல்லி விட முடியாது என்பதை நாம் அறிவோம். எனவே சில முக்கிய குறிப்புகளை மட்டும் பகிர்வு செய்துள்ளேன். 
                                             
1. திரு ராஜாஜி அவர்கள் தமிழகத்தில் தற்போதைய கிருஷ்ண‌கிரி மாவட்டத்தில் ஓசூரில் இருந்து 15 கி.மி. தூரத்தில் உள்ள தொரப்பள்ளி என்ற‌ கிராமத்தில் முன்சீப்பாக இருந்த சக்கரவர்த்தி வேங்கடார்யா, சிங்காரம்மா தம்பதியருக்கு 10-12-1878ல் 3-வது மகனாக பிறந்தார்.

2. பிறந்த கிராமமான தொரப்பள்ளியிலேயே இளமைக்கல்வியையும் ஓசூரில் அரசுப் பள்ளியிலும் பயின்ற பின்னர் பெங்களூரு சென்ட்ரல் கல்லூரியிலும் சென்னை பிரசிடென்சி கல்லூரியிலும் கல்லூரி படிப்பை முடித்தார்.

3. தமது வழக்கறிஞர் தொழிலை கி.பி. 1900ம் ஆண்டு தொடங்கி நன்கு நடத்தி வந்த திரு ராஜாஜி அவர்கள் அரசியலில் ஈடுபட்டு சேலம் நகராட்சி உறுப்பினராகவும், பின்னர் மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

4. இந்திய தேசிய காங்கிரசில் இணைந்து சுதந்திரப் போரில் ரௌலத் சட்டத்திற்கு எதிராகவும் , ஒத்துழையாமை இயக்கம், வைக்கம் சத்தியாகிரகம் போன்றவற்றில் ஈடுபட்டார்.

4. தேசப்பிதா மகாத்மா காந்தி 1930ல் தண்டி யாத்திரையை தொடங்கியபோது  வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகத்தில் தலைமை ஏற்று நடத்தி ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு சிறை சென்றார்.

5. ஒருங்கிணைந்த மதராச பட்டினத்தின் முதன்மை மந்திரியாக 1937ல் பொறுப்பேற்று 1940 வரை பதவி வகித்தார்.அவ்வமயம் இந்து கோவில்களில் தாழ்த்தப்பட்டவர்கள் நுழைய அனுமதிக்க 1939 ல் திரு ராஜாஜி அவர்கள் "Temple Entry Authorization and Indemnity Act" என்ற சட்டத்தை உருவாக்கி மிகப்பெரிய புரட்சி செய்தார் என்றால் அது மிகையாகாது. 2ம் உலகப் போரில் ஆங்கிலேய அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும், அப்போது தான் இந்தியாவுக்கு விரைவில் விடுதலை கிடைக்கும் என்ற எண்ணத்தை, அன்றைய நாளில் சி.ஆர். பார்முலா என்று சரித்திரம் கூறும் ராஜதந்திர நிகழ்வால் மகாத்மா காந்தியின் வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

6. ஆங்கிலேயரால் அமைக்கப்பட்ட இடைக்கால அரசில் 1946ல் தொழில்,வழங்கல்,கல்வி மற்றும் நிதித் துறை அமைச்சராக திரு ராஜாஜி அவர்கள் பதவி வகித்தார்..

7. சுதந்திர இந்தியாவில் 1947 முதல் 1948 வரை மேற்கு வங்க ஆளுனராகவும்,1948 முதல் 1950 வரை குடியரசுக்கு முன்னர் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் பதவி வகித்தார்.

8. இந்திய அரசில் 1951 முதல் 1952 வரை உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.

9. ஒருங்கிணைந்த தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா இவைகளை உள்ளடக்கிய சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக 1952 முதல் 1954 வரை பதவி வகித்த போது திரு ராஜாஜி அவர்களின் குலக்கல்வித் திட்டத்திற்காக மிகுந்த விமரிசனத்திற்கு உள்ளானார்.!

10. ஆசிய ஜோதி ஜவஹர்லால் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தாராளமயத்தை கொள்கையாகக் கொண்ட சுதந்திராக் கட்சியை காங்கிரசில் இருந்து விலகி 1962ல் திரு ராஜாஜி அவர்கள் தொடங்கினார்.

11. 1967 சட்டமன்ற தேர்தலில் காங்கிரசிற்கு எதிரான அணியை ஒருங்கிணைத்து தி.மு.க. உடன் கூட்டணி கண்டு தமிழக அரசியலில் முதன்முறையாக காங்கிரசல்லாத ஆட்சி மலர பேறறிஞர் அண்ணா அவர்கள் தமிழக முதல்வராக துணை செய்தது மட்டுமன்றி, பொதுத் தேர்தலிலும் திரு ராஜாஜி அவர்களின் சுதந்திராக் கட்சி 45 இடங்களைப் கைப்பற்றி மைய அரசில் முதன்மை எதிர்கட்சியாக விளங்கியது.

12. இந்தியாவின் மிக உயர்ந்த சிவிலியன் விருதான "பாரத ரத்னா" விருது 1954ம் ஆண்டு மூதறிஞர் ராஜாஜி அவர்களுக்கு வழங்கப் பட்டது. 

13. திரு ராஜாஜி அவர்கள் தமது எழுத்தாற்றலால் இராமாயணம், மகாபாரதம் போன்ற காப்பியங்களை தமிழில் மொழி பெயர்த்து, தமிழ் இலக்கியத்திற்குச் சிறப்பாக பங்களித்துள்ளார். இவரது "சக்ரவர்த்தி திருமகன்" காப்பியத்திற்காக 1958ம் ஆண்டு "சாகித்ய அகாடமி" விருது வழங்கப் பட்டது.

14. "பாரத ரத்னா" திருமதி எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்களால் பாடப்பட்டு பெரும் புகழ் பெற்ற தமிழிசைப் பாடல் "குறை ஒன்றும் இல்லை, மறை மூர்த்தி கண்ணா" என்பது திரு ராஜாஜி அவர்களால் எழுதப் பட்டது.

15. மூதறிஞர் ராஜாஜி அவர்கள் 1972ம் ஆண்டு தனது 95ம் வயதில் இயற்கை எய்தினார். அப்போது தந்தை பெரியார், கலைஞர், பேறறிஞர், மக்கள் திலகம் உட்பட அனைவரும் அஞ்சலி செலுத்தினர். இந்த மாபெரும் தலைவரின் மறைவிற்கு அரசு மரியாதை அளிக்கப் பட்டது. 

16. தமிழக அரசு மூதறிஞர் ராஜாஜி அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் தொரப்பள்ளியில் அவரது இல்லத்தை நினைவு இல்லமாகவும், உடல் அடக்கம் செய்யப்பட்ட சென்னை கிண்டியில் அவருக்கு நினைவு மண்டபமும் அமைத்துள்ளது. மேலும் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழக அரசின் மண்டபத்திற்கு ராஜாஜி மண்டபம் என்று பெயர் சூட்டியுள்ளது.

No comments:

Post a Comment